இலங்கையில் டெங்கு தாண்டவம்; 3 மாதங்களில் 7,947 பேர் பாதிப்பு!
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரத்து 947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் ஜனவரி மாதத்தில் 5 ஆயிரத்து 397 பேராகப் பதிவாகியுள்ளனர்.
பெப்ரவரி மாதத்தில் 1,826 நோயாளர்களும், மார்ச் மாதத்தில் 725 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரையில் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அதற்கமைய 1,433 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கம்பஹா மாவட்டத்தில் 903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் 803 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் குருநாகலில் 761 டெங்கு நோயாளர்களும், புத்தளத்தில் 538 நோயாளர்களும், களுத்துறையில் 499 நோயாளர்களும் மற்றும் காலி மாவட்டத்தில் 456 பேர் டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர் என்றும் தொற்றுநோயியல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.