யாழில் கலாசார மத்திய நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
இந்தியா – இலங்கை நட்பு ரீதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட்ட கலாசார மத்திய நிலையம் நேற்றையதினம் (28) திறந்து வைக்கப்பட்டது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் இணைந்து கலாசார மத்திய நிலையத்தை இணையவாயிலாக திறந்து வைத்தனர்.
மேலும், இந்தியாவின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட இக் கலாசார மத்திய நிலையமானது சைவத் தமிழ் பாரம்பரிய முறைகளை தாங்கிய கலைப்படைப்புகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு 11 மாடிகளைக் கொண்ட இந்நிலையம் அருங்காட்சியகத் தொகுதி, கலாசார அரங்கு மற்றும் கோபுரத் தொகுதியென மூன்று பிரதான கட்டடத் தொகுதிகளை உள்ளடக்கியதாகவும் காணப்படுகின்றது.