பங்களாதேஷிடம் இருந்து இலங்கை மேலும் கடனை கோருகிறது!

பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான நாணய பரிமாற்ற ஏற்பாடாக இருக்கும். முன்னதாக, அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க பங்களாதேஷ் இதேபோன்ற கடன் வசதியை இலங்கைக்கு வழங்கியது.