ராஜபக்சக்கள் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை; பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே மிகவும் அவசியம்.
“நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ அல்லது பிரதமர் மஹிந்த ராஜபக்சவோ அல்லது நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவோ பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே மிகவும் அவசியம்.”
இவ்வாறு அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“என்னால் இன்னும் கிராமத்துக்குச் செல்ல முடிகின்ற போதிலும் மக்கள் வரிசையில் நிற்பதைக் கண்டு நான் வருத்தமடைகின்றேன்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசிலுள்ள எவரும் பதவி விலகுவதில் அர்த்தம் இல்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே மிகவும் அவசியம்.
அரசிடம் நிதியைக் கடுமையாகக் கையளிப்பதை எண்ணெய் மற்றும் எரிவாயு வரிசையில் நிற்கும் மக்கள் நன்கு அறிந்திருந்த போதிலும் அதற்கு அரசு வழங்கும் பதில்கள் போதுமானதாக இல்லை.
எனவே, அரசிலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு விரைந்து தீர்வு காணவேண்டும்” – என்றார்.