பெரும்பான்மையை இழந்தது பாகிஸ்தான் அரசு.
பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.
பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை முக்கிய கூட்டணி கட்சியான MQM வாபஸ் பெற்றுள்ளது. இதனால் இம்ரான் கான் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்துள்ளது.
இம்ரான் கான் அரசிற்கு ஆதரவை வாபஸ் பெற்றதோடு அல்லாமல் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடன் MQM கட்சி உடன்படிக்கையையும் செய்து கொண்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை (31) நடைபெற உள்ளது.