இந்தியா 750 மில்லியன் டொலரை எரிபொருளுக்கு கடனாக வழங்கவுள்ளது.

எரிபொருளுக்கான 500 மில்லியன் டொலர் கடன் வசதியை அதிகரிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி எரிபொருள் கொள்வனவு செய்வதற் காக வழங்க ஒப்புக்கொள்ளப்பட்ட 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி 750 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின் போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தக் கோரிக் கையை முன்வைத்துள்ளார்.
எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு இலங்கைக்கு மாதாந்தம் 500 மில்லியன் டொலர் தேவைப்படுகின்றது.