நாட்டை முழுமையாக முடக்கத் தயாராகும் அரசு?

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக, சில நாட்களேனும் நாட்டை முழுமையாக முடக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதோடு, மின்வெட்டு காரணமாக வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல தொழில்துறைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு உயர்மட்டங்களில் இருந்து அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.