பெண்களைப் பாதிக்கும் Alopecia தலைமுடி உதிரும் பிரச்சினை : அப்படியென்றால்?
இணையத்தில் புயல்போல் வலம்வந்த செய்தி ஆஸ்கார் விருது விழாவில் நடிகர் வில் ஸ்மித் மேடையேறித் தொகுப்பாளர் கிறிஸ் ராக்குக்கு விட்ட அறை…
அவர் அவ்வாறு செய்தது ஏன்? ஸ்மித்தின் மனைவி ஜேடாவின் தலைமுடியைப் பற்றி ராக் கேலி செய்ததால் அவர் அறை வாங்கினார்.
ஜேடாவுக்கு Alopecia எனும் தலைமுடி உதிரும் பிரச்சினை உள்ளதாகக் கூறப்படுகிறது.
Alopecia என்றால் என்ன? மருத்துவர்கள் கூறுவது?
- உடலில் உள்ள எதிர்ப்புச் சக்தி சொந்த உயிரணுக்களைக் கிருமியெனத் தவறாகக் கருதி அவற்றைத் தாக்கும். அதுவே Alopecia.
- தலைமுடி வேர்விடும் இடத்தை உடலில் உள்ள எதிர்ப்புச் சக்தி தாக்கும்போது முடி உதிர்கிறது. பெரிய அளவில் முடி உதிரும்போது வழுக்கை விழும்.
- சிலருக்கு நிரந்தரமாக அந்தப் பகுதிகளில் முடியில்லாமல் போய்விடும். சிலருக்கு வெகுநாள் கழித்துத் தலைமுடி மீண்டும் வளரும்.
Alopecia பெண்களையும் பாதிக்குமா?
- பொதுவாக வழுக்கை விழும் பிரச்சினை ஆண்களிடையே அதிகம் காணப்படுகிறது. ஆனால் Alopecia பெண்களையும் பாதிக்கக்கூடியது.
- Alopeciaவால் ஆண்களைவிடப் பெண்களுக்கே அதிகப் பாதிப்பு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Alopeciaவால் ஏற்படும் பாதிப்பு?
- தன்னம்பிக்கை குறையலாம்
- முக அழகு குறைவதாக உணரலாம்
- மனவேதனையால் சிலருக்கு மனநலப் பிரச்சினைகள் ஏற்படலாம்
தீர்வு?
பொதுவாக ஒருவரின் மரபணுக்களில் Alopeciaவை உண்டாக்கும் தன்மை இருந்தால் அவருக்கு அது ஏற்படும் சாத்தியம் அதிகம்.
கடுமையாவதைத் தவிர்க்கச் சில வழிகள் உண்டு…
- சத்தான உணவை உட்கொள்வது
- உணவில் இரும்புச் சத்து, செலினியம், ஸிங்க் (Selenium, Zinc) ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வது
- தலையில் ரசாயனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது
- தலைமுடியை மிக இறுக்கமாகக் கட்டுவதைத் தவிர்ப்பது