சிங்களமொழி மற்றும் உயிர்காப்பு பயிற்சி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையினால் (Civil Citizen Council of Batticaloa District -CCCBD) நடாத்தப்பட்ட சிங்களமொழி பாடநெறியைப் பூர்த்தி செய்தோருக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் உயிர்காப்பு பயிற்சி பெற்ற வீரர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கடந்த 29.03.2022ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் ரீ.திருநாவுக்கரசு (SLPS) தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பிரதம அதிதியாக 231வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி WMNKD பண்டார (RWP RSP USP psc) கலந்து கொண்டார்.
விஷேட அதிதிகளாக ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜி, CASDRO நிறுவன நிறைவேற்றுப்பணிப்பாளர் எம்.ஜே.எம்.அன்வர் நெளஷாத், மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் (Civil Citizen Council of Batticaloa District -CCCBD) செயலாளரும் சிங்களமொழி பாடநெறி ஆசிரியருமான எச்.எம்.அன்வர், ஏவிஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சதீக், ஏவிஷன் டைவர்ஸ் அணியின் பொறுப்பாளர் கே.பெளஸ்தீன், ஏவிஷன் நிறுவன அவசர சேவைப்பிரிவுப் பொறுப்பாளர் ஏ.எஸ்.அறபாத், ஏவிஷன் நிறுவன கல்விப்பிரிவுப் பொறுப்பாளர் ஆர்.ஜுனைதீன் ஆசிரியர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றுநோய் சூழ்நிலையின் போது பெறுமதிமிக்க, அர்ப்பணிப்பான சேவையை வழங்கிய 231வது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி WMNKD பண்டார (RWP RSP USP psc), 4வது படைப்பிரிவு கட்டளைத்தளபதி லெப்டினன் கேர்ணல் JAMP குணவர்த்தன (RWP RSP USP), வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார,
கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் (SLAS1), கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு (SLAS1), ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் (SLPS), ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ்தீன் ஹாஜி, Human Welfare Association தலைவர் கே.எல்.சாஜஹான் ஆகியோர் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டனர்.
இதன் போது, சிங்களமொழி பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்த 135 மாணவர்களுக்கும் மற்றும் உயிர்காப்பு பயிற்சி பெற்ற 30 வீரர்களுக்குமான சான்றிதழ்கள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
இதற்கான பூரண அனுசரணையினை ஓட்டமாவடி அகீல் மோட்டர்ஸ் நிறுவனத்தினர் வழங்கியிருந்தனர்.