தென்மேற்கு பசிபிக் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!
தென்மேற்கு பசிபிக் பகுதியில் உள்ள பிரான்சின் நியூ கலிடோனியா தீவுகளில் இன்று அதிகாலை 2.27 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவானது.இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக, வனுவாட்டு, பிஜி மற்றும் நியூ கலிடோனியா கடற்கரைகளில், அலை மட்டத்திற்கு மேல் 0.3 மீட்டருக்கும் குறைவான அலைகள் எழும்ப வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க தேசிய வானிலை சேவை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரான்சின் நியூ கலிடோனியாவின், கிழக்குப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி, மாலை 4.44 மணிக்கு ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் (6.2 மைல்) ஆழத்தில், நியூ கலிடோனியாவின் டாடினுக்கு தென்கிழக்கே 279 கிலோமீட்டர் (173 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.