கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக நினைத்திருந்த பெற்றோருக்கு காத்திருந்த பயங்கர அதிர்ச்சி

இந்தியாவில் பெண் ஒருவர் கர்ப்பமுற்றிருந்த நிலையில், அவருக்கு கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருப்பதாக அவர்கள் நினைத்திருந்தார்கள்.
ஆனால், இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த Shaheen Khan, Sohail தம்பதியருக்கு திங்கட்கிழமையன்று (மார்ச் 28)குழந்தை பிறந்தபோது, அவர்கள் மட்டுமின்றி மருத்துவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
காரணம், பிறந்த குழந்தை இரண்டு தலைகளுடன் காணப்பட்டது.
அத்துடன் அதற்கு மூன்று கைகளும், இரண்டு இதயங்களும் உள்ளன. அதாவது, சில நேரங்களில் ஒட்டிப் பிறக்கும் இரட்டைக் குழந்தைகள் இப்படிப் பிறந்து விடுவதுண்டு. அவை பொதுவாக இறந்தே பிறக்கும்.
ஆனால், இந்த குழந்தையோ இன்னமும் உயிருடன் உள்ளது. மருத்துவர்கள் அந்தக் குழந்தையை கவனமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.