சசீந்திர ராஜபக்ஷவுக்கு எதிராக கறுப்புக்கொடி : விழாவை தவிர்த்துக் கொண்ட அமைச்சர்!
இராஜாங்க அமைச்சர் ஷஷேந்திர ராஜபக்ஷ தலைமையில் கிரிஇப்பனார மகாவலி விளையாட்டரங்கில் இன்று நடைபெறவிருந்த காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ஷஷேந்திர ராஜபக்ஷ கலந்து கொள்விருந்த போதும் , பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியபடி கோசமிட காத்திருந்தனர்.
இதையறித்த இராஜாங்க அமைச்சர் குறித்த இடத்திற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டும் அவர் நிலவரத்தை கருத்தில் கொண்டு அந்த இடத்திற்கு வரவில்லை.
Update
இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ கலந்து கொள்ளாவிட்டாலும், அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க அங்கே போக முற்பட்ட போது , பலத்த மக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து எம்.பி.யை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த அவரது பாதுகாவலர்கள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதுகாப்பு தரப்பினர் பாராளுமன்ற உறுப்பினரை வேறொரு வாகனத்தில் ஏற்றிச் சென்று சந்துகள் உள்ள வீதிகளூடாக அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.