ஜனாதிபதி கோட்டா தலைமையில் அவசர கூட்டம்- சுதந்திரக்கட்சி புறக்கணிப்பு.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் தற்போது இடம்பெற்று வருகிறது.
மிரிஹானயில் நேற்றிரவு ஏற்பட்ட சம்பவம் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், இந்த கூட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் மைத்ரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்று வருகிறது.
கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.