இலங்கையில் , இந்திய இராணுவமா? கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கருத்து
இலங்கைக்கு இந்தியா, விமானங்களில் இந்தியா இராணுவத்தினரை அனுப்பியுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் , முற்றிலும் ஆதாரமற்றதுமான செய்தி எனவும் , அதை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளது.
இவ்வாறான பொறுப்புணர்வற்ற செய்திகளை , உயர் ஸ்தானிகராலயம் கண்டித்துள்ள அதேநேரம் , சம்பந்தப்பட்டதரப்பினர் வதந்திகளை பரப்புவதை தவிர்க்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
அது குறித்து அறிக்கை ஒன்றை கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ளது