பொலிஸ் காவலில் காணாமல் போன சமூக வலைத்தள செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார
சமூக வலைத்தள செயற்பாட்டாளர் அனுருந்த பண்டார பொலிஸ் காவலில் உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இளம் ஊடகவியலாளர் சங்கத்திற்கு அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை முகத்துவார போலீசார் என , அனுருந்த பண்டாரவின் வீட்டுக்கு வந்த சிலர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில் , மனித உரிமை ஆணைக்குழு மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரது அழுத்தங்களின் பின் , அனுருந்த பண்டார , தம்மிடம் இருப்பதாக முகத்துவார குற்றப்பிரிவு , மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன தெரிவித்தார்.
அனுருத்த பண்டார பொலிஸ் காவலில் இருப்பதை SJB பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் உறுதிப்படுத்தினார். அவர் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிஸார் தமக்கு அறிவித்ததாக மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
Got Go Home என்ற முகநூல் பக்கத்தை நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
“அரசின் மீதான வெறுப்பு உணர்வுகளை தூண்டுவது அல்லது தூண்ட முயற்சிப்பது குற்றமாக கருதும் இலங்கை தண்டனைச் சட்டத்தின் 120வது பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன, இதற்கு எதிராக நாங்கள் போராடுவோம், இதுபோன்றவர்களை அவர்களால் கைது செய்ய முடியாது. ” என பாராளுமன்ற உறுப்பினர் நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
அனுருத்த பண்டார, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கடுமையாக விமர்சித்தவர் என்பதும் , அவர் ஒரு பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.