தரங்கெட்ட தரகர்களின் குரூப் போட்டோ. செல்ஃபி விமர்சனம்.

ஜிவி பிரகாஷ்குமார், வர்ஷா பொல்லம்மா, கௌதம் மேனன், வித்யா பிரதீப், சந்திரசேகர், குணாநிதி
இயக்கம் – மதிமாறன்
இசை – ஜிவி பிரகாஷ்குமார்
தயாரிப்பு – டிஜி பிலிம் கம்பெனி

தமிழ் சினிமாவில் இதுவரை எவராலும் சொல்லப்படாத கதை. இன்ஜினியரிங் & மருத்துவக் கல்லூரிகளில் ‘மேனேஜ்மென்ட் சீட்’ என்ற காலி இடங்களுக்காக தரகர்கள் முதல் படத்தின் கதை.

தமிழ் சினிமாவில் இதுவரை எவராலும் சொல்லப்படாத கதை. இன்ஜினியரிங் & மருத்துவக் கல்லூரிகளில் ‘மேனேஜ்மென்ட் சீட்’ என்ற காலி இடங்களுக்காக தரகர்கள் முதல் படத்தின் கதை.

கதைக்களம்..

வாகை சந்திரசேகர் கட்டளைப்படி கட்டாயத்தின் பெயரில் ஊரிலிருந்து சென்னைக்கு வந்து இன்ஜினீயரிங் படிக்கிறார் நாயகன் ஜிவி. பிரகாஷ்.

சில நேரம் கல்லூரி கட்டணம் கட்டவே அவஸ்தைப்படுகிறார். எனவே பார்ட் டைம் ஜாப் போக சொல்கிறார் அப்பா சந்திரசேகர்.

எனவே உடனே பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு, கல்லூரியில் மாணவர்களை சேர்த்துவிடும் புரோக்கர் வேலை பார்க்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

ஒரு சீட்டுக்கு இவ்வளவு என நிர்ணயித்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

இதே வேலையை தான் முன்னாள் இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் கௌதம் மேனன் பெரிய கும்பலுடன் செய்து வருகிறார். இதற்கு பின்னால் ஒரு பெரிய யூனிவர்சிட்டியே நிற்கிறது.

ஒரு கட்டத்தில் நண்பர்களால் பெரிய லாபத்திற்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்த பிரச்னை கௌதம் மேன்னுக்கு தெரிய வருகிறது.

ஜிவி. பிரகாஷை என்ன செய்தார் கௌதம் மேனன்.? சிக்கலில் இருந்து விடுபட்டாரா நாயகன்? என்பதே படத்தின் மீதிக்கதை.

கல்லூரி மாணவனாக கனல் கேரக்டரில் கணமாக வேடத்தை எடுத்து அதை 100% சரியாக செய்துள்ளார் ஜிவி. பிரகாஷ்.

நண்பனுக்காக உருகி, அப்பாவிடம் கோபித்து, காதலியிடம் சண்டையிட்டு என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

என் அப்பாவ நாட்டின் கோவம் வரது என சொன்னாலும் ஒரு கட்டத்தில் அப்பாவைப் பற்றி தெரிந்தவுடன் வருந்துவது செம.

இறந்து போன நண்பன் நசீருக்காக உருகி நட்புக்காக சம்பாதித்து கைதட்டல் பெற்றிருக்கிறார்.

ஸ்டைலிஷ் வில்லனாக இந்த படத்திலும் ரவிவர்மா கேரக்டரில் அசத்திருக்கிறார் கவுதம் மேனன். அசத்தலான பின்னணி இசையை அவருக்கு போட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.

இரண்டு நாயகிகள் வர்ஷா பொல்லம்மா & வித்யா பிரதீப். இருவருக்கும் கண்கள் ப்ளஸ்.. டயலாக்கை கூட கண்களாலே பேசிவிடுகிறார்கள். நடிப்பில் கச்சிதம்.

ஜி.வி.பிரகாஷின் நண்பராக வரும் நசீர் (டி.ஜி.குணாநிதி) சென்டிமெண்ட் நடிப்பில் கவர்கிறார். இவர் எடுக்கும் முடிவு பல இளைஞர்களுக்கு பாடமாக அமையும்.

குணாநிதியின் தாயாக ஸ்ரீஜா நம்மை கவர்கிறார்.

வாகை சந்திரசேகர் அனுபவ நடிப்பை வழங்கியிருக்கிறார்.

தங்கதுரை, சாம் பால் ஆகியோர் கதை ஓட்டத்திற்கு உதவியுள்ளனர். கல்லூரி அதிபராக ஈஸ்வரமூர்த்தி கேரக்டரில் சங்கிலி முருகன் நல்ல தேர்வு. இவரின் மருமகனும் கச்சிதம்.

பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம். படத்துடன் ரசிகனை ஒன்ற வைக்கும். போஸ்மேன் பாடலை தவிர பாடல்கள் பெரிதாக இல்லை.

பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ். ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி.

படத்தின் எடிட்டரும் (இளையராஜா) பாராட்டுக்குரியவர்தான். தேவையற்ற காட்சிகள் இல்லை எனலாம்.

தனியார் கல்வி நிறுவன முறைகேடுகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்ட இயக்குனர் மதி மாறனுக்கு பாராட்டுகள். யூகிக்க முடியாத திரைக்கதை அமைத்திருக்கிறார்.

இன்ஜினியரிங் & மருத்துவக் கல்லூரிகளில் ‘மேனேஜ்மென்ட் சீட்’ எனப்படும் காலி இடங்களுக்காக தரகர்கள் நன்கொடையை எப்படி வசூலிக்கிறார்கள்.

இந்த ஆட்டத்தில் யாரால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை துணிவோடு ஆணித்தரமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் மதிமாறன். இவர் இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளர்.

பல கல்வி நிறுவனங்கள் மக்களின் பணத்தை சுரண்டும் வேளையில் தைரியமாக படத்தை எடுத்த தயாரிப்பாளர் சபரீஷ்-ஐ வெகுவாக பாராட்டலாம்.

Leave A Reply

Your email address will not be published.