2-வது ஒருநாள் போட்டி : நெதர்லாந்தை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி.
நெதர்லாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது .இரு அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது . நியூசிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது
இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது .டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது .
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அந்த அணி 32 ரன்கள் எடுப்பதற்க்குள் 5 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது.
நியூசிலாந்து அணியில் டாம் லேதம் மட்டும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார் .அதிரடியாகி விளையாடிய அவர் சதம் அடித்து அசத்தினார் .இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக டாம் லேதம் 140 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடர்ந்து 265 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 34.1 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது .இதனால் 118 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது ,3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-0 என கைப்பற்றியது.