கழிப்பறையில் வீசப்பட்ட ஆண் சிசு – திருநின்றவூர் பகுதியில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

திருநின்றவூர் அருகே தனியார் மருத்துவ கிளினிக்கின் கழிவறையில் 173 கிராம் எடைகொண்ட ஆண் சிசு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் காந்திசிலை அருகே சுகம் என்ற மருத்துவ கிளினிக்கின் கழிப்பறையில் ஆண் சிசு ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த அவர்கள், சிசுவின் சடலடத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பின் நடத்திய விசாரணையில், அந்த கிளினிக்கிற்கு இரண்டு பெண்கள் வந்ததாகவும், அவர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என ஊழியர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவரும் போலீசார், கிளினிக்கில் கருக்கலைப்பு ஏதேனும் நடந்ததா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.