உக்ரைனில் இருந்து மக்களை வெளியேற்ற கப்பல்களை அனுப்ப தயார்…

உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் நகரம் போரால் உருக்குலைந்த நிலையில், அங்கிருந்து குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற துருக்கி நாட்டு கப்பல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
பொதுமக்கள் ஏராளமானோர் காயம் அடைந்திருப்பதால் அவர்களை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவும் துருக்கி கடற்படையினர் தயாராக உள்ளதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சர் அகர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய இதனிடையே கடல்வழிப் பாதையில் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கண்ணி வெடிகளைக் கண்டுபிடித்து அகற்றம் பணியில் துருக்கி கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ,ருமேனியா கடற்படையினரும் கடல் பாதையில் ஆபத்தான கண்ணி வெடிகளைக் கண்டு அகற்றி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.உக்ரைன் தனது கண்ணி வெடிகளை கடலில் கொட்டி வைத்துள்ளதாக ரஷ்யா கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தது.