ATM இடையூறுகள் குறித்து தனியார் வங்கிகளின் அறிவிப்பு.

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக ஏடிஎம் மற்றும் சிடிஎம் இயந்திர சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என பல தனியார் வங்கிகள் எச்சரித்துள்ளன.
இது குறித்து இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகள் தமது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
ATM/CRM/CDM இயந்திரங்களில் சேவைத் தடங்கல்களை சந்திக்க நேரிடலாம் என்பதையும், மின்சார விநியோகத்தில் நிலவும் கட்டுப்பாடுகள் காரணமாக எங்கள் சில கிளைகள் மூடப்படலாம் எனவும் வங்கிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.