ஊரடங்குச் சட்டத்தை மீறி நாடு முழுவதும் போராட்டம்! பேராதனை மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் (Video)

தற்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போதிலும் பல பகுதிகளில் போராட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டி பேராதனையில் நடைபெற்ற பேரணியின் போது கலகத்தை அடக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தியுள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு அருகாமையில் பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.