கேபினட் அமைச்சர்கள் ராஜினாமா

அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.