பெரும்பான்மையை இழக்கிறது அரசு : 50 மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சையாக செயல்பட முடிவு!
மக்களின் எதிர்ப்புகளை மீறி அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க தீர்மானித்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக இருப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான 113 ஆசனங்களை அரசாங்கம் இழப்பதை உறுதிசெய்யும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேம ஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோர் புதிய அரசாங்கத்தில் உத்தேச பதவிகள் எதனையும் ஏற்றுக் கொள்வதில்லை என தீர்மானித்துள்ளனர்.
நாளை பாராளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாக பாராளுமன்றத்தில் செயற்படுவார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.