இந்த ஆட்சி உடன் மாறட்டும் நிலையான அரசு மலரட்டும் சபையில் விமல் வலியுறுத்து.

“நாட்டில் உள்ள தற்போதை அரசு மாறி நிலையான அரசொன்று நிறுவவேண்டும்.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச எம்.பி. வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“எமது கூட்டணியில் உள்ள 10 அரசியல் கட்சிகளும் அதில் உள்ள 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்பு போலவே தொடர்ந்து சுயாதீனமாகச் செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளோம்” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.