இலங்கை நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.

இலங்கை தசாப்தகாலத்தில் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை அதிகரித்து வருகின்ற நிலையில் இலங்கையின் அரசியல் சமூக நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் வோசிங்டனிற்கு விஜயம் மேற்கொள்ளும்போது அவருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது குறித்து ஆர்வமாக உள்ளோம் இலங்கை அதிகாரிகளுடன் திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வது குறித்து ஆர்வமாக உள்ளோம் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மஜாஹிரோ நொசாகி ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.