சஞ்சய் ராவத்துக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை
மும்பை பிஎம்சி வங்கி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வங்கியில் இருந்து ரூ.95 கோடி கடன் பெற்றதாக கட்டுமான நிறுவன இயக்குனர்களில் ஒருவராக பிரவின் ராவத் என்பவரை அமலாக்கத்துறை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தது. அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவரின் வங்கி கணக்கில் இருந்து அவரது மனைவி மாதுரிக்கு 1.60 கோடி ரூபாய் அனுப்பியதும், மேலும் சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்துக்கு வட்டி இல்லா கடனாக 55 லட்ச ரூபாயாக மாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இதுமட்டுமின்றி சஞ்சய் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் முறைகேடாக நிலம் மற்றும் வீடு வாங்கிய புகாரில் மற்றொரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.
இந்தநிலையில் சஞ்சய் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய அலிபாக், மும்பையின் தாதர் புறநகரில் உள்ள சுமார் 1,0,34 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
இந்த விகாரம் குறித்து பேசிய சஞ்சய் ராவத், ‘பா.ஜ.கவின் கோரிக்கைகளுக்கு அடிபணிய மறுத்ததால் மத்திய அரசின் நிறுவனங்களை தவறாக பயன்படுத்தி என் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி எதிர்கட்சியினரை மிரட்டுகின்றனர். உண்மை வெல்லும்’என்று தெரிவித்துள்ளார்.