ரூ.1,000 கோடி வசூலை நெருங்கும் ஆர்.ஆர்.ஆர்.

இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.
இந்த திரைப்படம் திரையரங்கில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்துக்கொண்டிருந்த நிலையில், இப்படம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது.
இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 900 கோடி வசூலை குவித்து சாதனை படைத்துள்ளது. இந்த படமானது விரைவில் ரூ. 1000 கோடி வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.