ஜனாதிபதியை பதவிலகுமாறு நாடாளுமன்றம் கேட்க முடியாது.
ஜனாதிபதியை பதவிவிலகுமாறு நாடாளுமன்றம் கேட்க முடியாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று அவசரஅவசரமாக இடம்பெற்ற கட்சி தலைவர்கள் சந்திப்பின்போது சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் நாட்டில் தற்போது காணப்படும் பதற்றநிலையை தணிப்பதற்காக ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என நாடாளுமன்றம் கோரவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வேண்டுகோள் விடுத்துள்ளது.
எனினும் சபாநாயகர் இதனை நிராகரித்துள்ளதுடன் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோருவதற்கான ஜனநாயக அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இல்லை என தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்,ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களே அவரின் எதிர்காலம் குறித்து தீர்மானிக்கவேண்டும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.