ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் (நேரடி காணொளி)
தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக குருநாகல் நகரின் மையப்பகுதியில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அலுவலகத்திற்கு அருகில் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை, ஜனாதிபதி பதவி விலக மாட்டார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு எனவும் சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கும் எந்தவொரு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் பலம் தமக்கு இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல்வாதிகள் என்ற வகையில் ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் நாடாளுமன்றில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, இந்த எதிர்ப்புகளை எதிர்கொண்டு ஜனாதிபதி பதவி விலக மாட்டார் என்றும் அதற்கு முகம் கொடுப்பார் என்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.
நான் திறந்த கரங்களுடன் சொல்கிறேன். இவர்கள் புரட்சி செய்ய தயாராகி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்களை அழிக்க முயல்கிறார்கள். ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்து, மக்களை பாதுகாக்க ஊரடங்குச் சட்டத்தை நீக்கினார். மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.
அவர் எங்களை அடிக்க முயன்றால், அதற்கும் பதில் தர தயாராக இருக்கிறோம். நாட்டில் சட்டம் உள்ளது. ஜனநாயகத்தை மதிப்பவர்களை எம்முடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம். பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியே சென்று உள்ளே வரவும் வேண்டும். சபாநாயகரால் எந்த வகையிலும் எம்மை பாதுகாக்க முடியாவிட்டால் சொல்லுங்கள். இவற்றை நாம் எதிர்கொள்ள முடியும். அரசியல்வாதிகளாகிய நாம் ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் அதனை எதிர்கொள்ள முடியும்.
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் அலுவலகத்திற்கு முன்பாக தற்போது இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் நேரடி காட்சிகள் கீழே:-