14 பந்துகளில் அரைசதம் கடந்து வரலாறு படைத்த பாட் கம்மின்ஸ்.
15வது ஐபிஎல் டி.20 தொடரின் 14வது லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் பாட் கம்மின்ஸ் 14 பந்துகளில் அரைசதம் அடித்து வரலாறு படைத்துள்ளார்.
இந்த போட்டியில் 14 பந்துகளில் அரைசதம் அடித்த பாட் கம்மின்ஸ், இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அசுர வேகத்தில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில், கே.எல் ராகுலுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார்.
குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியல்
கே.எல் ராகுல் – 14 பந்துகள் vs டெல்லி கேப்பிடல்ஸ் – 2018ம் ஆண்டு
பாட் கம்மின்ஸ் – 14 பந்துகள் vs மும்பை இந்தியன்ஸ் – 2022ம் ஆண்டு
யூசுப் பதான் – 15 பந்துகள் vs ஹைதராபாத் – 2014ம் ஆண்டு
சுனில் நரைன் – 15 பந்துகள் vs பெங்களூர் – 2017ம் ஆண்டு.