மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வெல்வாரா பாபர் அசாம்?
ஐ.சி.சி. மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி, மார்ச் மாதத்தில் யார் சிறந்த வீரர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இந்நிலையில், மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர்களின் பெயரை ஐசிசி தற்போது பரிந்துரைத்துள்ளது.
இதில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் , வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரெய்க் பிராத்வெயிட், ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
அதேபோல், பெண்களுக்கான பரிந்துரை பட்டியலில் சோபி எக்ளேஸ்டோன் , லாரா வால்வோர்டட் மற்றும் ரேச்சல் ஹெய்ன்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த 3 பேரில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வெல்லப் போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.