யுத்தத்தை நிறுத்த சமாதான பேச்சுவார்த்தையை தொடர்வோம் : யுக்ரைன் ஜனாதிபதி.
யுத்த மோதல்களை நிறுத்துவதற்கு இரு தரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தையை தவிர வேறு மாற்று வழி இல்லையென யுக்ரைன் ஜனாதிபதி வோல்டிமொர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். எனினும் தனக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையில் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை இடம்பெற வாய்ப்பில்லையென்றும் யுக்ரைன் ஜனாதிபதி எதிர்வு கூறியுள்ளார்.
ரஷ்ய யுக்ரைன் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க மேற்கத்தேய நாடுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி திமித்திரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார். பூச்சா நகரில் சாமான்pயர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொய் பிரச்சாரத்தை முன்னெடுத்து இரு தரப்புக்கும் இடையில் ஏற்படும் இணக்கப்பாட்டை சீர்குலைப்பதற்கு முயற்சிகள்இடம்பெறுவதாக அவர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இதற்கு யுக்ரைனும் பாரிய ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் திமித்திர் மெத்வதேவ் தெரிவிக்கின்றார். எவ்வாறெனினும் இரு தரப்புக்கும்இடையில் பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெறவுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பூச்சா நகர் சம்பவம் தொடர்பில் யுக்ரைனும், மேற்குலக ஊடகங்களும் இணைந்து புறம்பான நிகழ்ச்சி நிரல் ஒன்றின் கீழ் செயல்படுவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு பல நகரங்களை ரஷ்ய தாக்குதல்கள் காரணமாக சாமான்யர்கள் கொல்லப்பட்டதை போன’;ற காணொளிகள் திட்டமிட்டு ஒளிப்பதிவு செய்யப்படுவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குற்றஞ்சுமத்துகின்றது.
ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை மேலும்அதிகரிக்க ஐரோப்பிய சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரஷ்யாவிலிருந்தான நிலக்கரி இறக்குமதியை நிறுத்த தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய சங்க தலைவர் அறிவித்துள்ளார். அதேபோல் ரஷ்யாவின் மிகப்பெரிய 4 வங்கிகளுக்கு எதிராக தடைகளை விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடல் உணவுகள், மதுபானங்கள், பலகை ஏற்றுமதி ஆகியவற்றை நிறுத்தவும் ரஷ்ய கப்பல்கள் ஐரோப்பிய சங்க நாடுகளின் துறைமுகங்களுக்கு நுழைவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை யுக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர்கள் யுத்த உதவியாக வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அதேபோல் ஜனாதிபதி புட்டினின் இரு மகள்களுக்கும், ரஷ்யாவின் வங்கிகளுக்கும் தடை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
யுக்ரைனில் யுத்தத்தில் ஈடுபட்ட ரஷ்ய படைவீரர்கள் 18 ஆயிரத்து 500 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரைன் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் யுக்ரைன் பாதுகாப்பு பிரிவுஇது தொடர்பிலான பதிவொன்றை இட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி முதல் இதுவரை 676 யுத்த தாங்கிகள் 1858 கவச வாகனங்கள், 150 விமானங்கள், 134 ஹெலிகப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளதாக யுக்ரைன் தெரிவிக்கின்றது. மேலும் 9861 ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லபபட்டுள்ளதாக அமெரிக்க உளவு பிரிவும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. எவ்வாறெனினும் இந்த கணக்குகள் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் 1351 ரஷ்ய வீரர்கள் மாத்திரமே யுத்தத்தில் உயிரிழந்திருப்பதாகவும் மேலும் 3825 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.