வெளிநாட்டுச் சிறைகளில் இத்தனை இந்தியர்களா?: மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

பல்வேறு நாட்டுகளின் சிறைகளில் 8,000-க்கும் அதிகமான இந்தியர்கள் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளின் சிறைகளில் விசாரணைக் கைதிகளாவும், சிறைவாசிகளாகவும் 8,278 இந்தியர்கள் இருப்பதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் வீ.முரளிதரன் மாநிலங்களவையில் இன்று தெரிவித்துள்ளார்,
குறிப்பாக, அதிகமாக ஐக்கிய அரபு நாடுகளில் 1,480 பேரும் அதில் சவுதி அரேபியாவில் மட்டும் 1,392 பேரும் உள்ளனர். அதற்கடுத்த இடமாக நேபாளத்தில் 1,112 சிறைவாசிகளும், பாகிஸ்தானில் 701 பேரும் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள்.
போதைப் பொருள், கொலை, பாலியல் வன்முறைகள் போன்ற குற்றச் சம்பவங்களில் இந்தியர்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தூதரகங்கள் மற்றும் அதிகாரங்களின் மூலமாகவும், அரசின் உயர்மட்டப் பயணங்களின்போதும் வெளிநாடுகளில் உள்ள இந்தியக் கைதிகளின் பொதுமன்னிப்பு/தண்டனைக் குறைப்பு ஆகியவற்றை பெற்றுக் கொடுத்ததாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளில், மொத்தம் 700 இந்தியர்கள் இதனால் பயனடைந்துள்ளனர் என்றும் இணையமைச்சர் வீ.முரளிதரன் தெரிவித்தார்.