மக்கள் குவிந்திருந்த ரெயில் நிலையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்!
உக்ரைன் மீது ரஷ்யா 6 வாரங்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், தற்போது தலைநகர் கீவ் மற்றும் பிற முக்கிய உக்ரைனிய நகரங்களில் இருந்த தனது படைகளை ரஷியா விலக்கி கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதில் கவனம் செலுத்திவருகிறது.
உக்ரைனில் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற காத்திருந்த ரெயில் நிலையம் மீது ரஷியா 2 ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று டான்பாஸ் பகுதியில் உள்ள கிராமடோர்ஸ்க் ரெயில் நிலையத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 35க்கும் பேற்ற்படவ்ர்கள் பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
தாக்குதலின் போது ரெயில் நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த ரெயில் நிலையம் மக்களை வெளியேற்ற உதவும் முக்கிய தளமாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.