பாடகி,நிலாமதி பிச்சையப்பா சென்னையில் காலமானர்
இலங்கையின் புகழ் பெற்ற பாடகியாக பலரால் அறியப்பட்ட ,
நிலாமதி பிச்சையப்பா சென்னையில் காலமானர்.
இறுதிக்கிரியைகள் இன்று நண்பகல் சென்னை மடிப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.
அன்னாருக்கு எமது அஞ்சலிகள்
பிந்திய இணைப்பு
இலங்கையின் பிரபல மெல்லிசைப்பாடகி நிலாமதி பிச்சையப்பா இன்று(08-04-2022) சென்னையில் தனது
64 வது வயதில் காலமானார்.
அவர் மெல்லிசை – மேடை – தொலைக்காட்சி பாடகி- கவிதாயினி – ரீ.வி- சினிமாக்கலைஞர்.
மட்டக்களப்பின் இசைக்குடும்பத்தில் பிறந்தவர்.அங்குள்ள வின்சென்ட் மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றவர் அவர்.தன் இசைக்குரு
ஜெயராணி ரீச்சர் என்று அடிக்கடி கூறிக்கொள்வார். இதை அவர் தனது பேட்டிகளிலும் கூறியுள்ளார்.
பின்னர் நிலாமதியும் இசை ஆசிரியராக நியமனம் பெற்றார்.
பின்னர் மேடையிலும் வானொலியிலும் பாட தொடங்கினார்.உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மேடைகளில் பாடத் தொடங்கினார்
தொலைக்காட்சியில் பாடும்பொழுது நடித்துக் கொண்டே பாடுவார்.
நின்னுககோரி என்ற பாடலை மிகவும் இனிமையாக பாடுவார்.
நிலாமதியும் , சிறீதர் பிச்சையப்பாவும் பல பாடல்களை சேரந்து பாடினர். அவர்களது நட்பு காதலாக மாறி கல்யாணததில் முடிந்தது.
நிலாமதியும் சிறீதரும் ” கொட்டி வலிகய ” என்ற சிங்களப்படத்திலும் நடித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் தம்பி ஐயாவின் கல்வி சேவையில் தயாரித்த வானொலி நாடகங்களிலும் நடித்துள்ளனர்.
அவரது ஆத்மா சாந்தி அடைவதாக …
ஓம் சாந்தி