இலங்கையின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது! IMF பேச்சுவார்த்தை காலவரையின்றி ஒத்திவைப்பு!
சர்வதேச நாணய நிதியம் (IMF) இன்று நவம்பர் 11 ஆம் தேதி வாஷிங்டனில் திட்டமிடப்பட்ட கூட்டத்தை காலவரையற்றி ஒத்திவைத்துள்ளது.
மத்திய வங்கியின் புதிய ஆளுனர் நந்தலால் வீரசிங்கவிடம் சர்வதேச நாணய நிதியம் இன்று இது குறித்து அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் நெருக்கடியே இதனை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
எவ்வாறாயினும், இது தொடர்பான பேச்சுவார்த்தையை ஒத்திவைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் கோருவதற்கும் மத்திய வங்கியின் ஆளுனர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இலங்கை அரசில் , நிதியமைச்சர் ஒருவர் இல்லாததே இதற்குக் காரணம் எனத் தெரியவருகிறது.