பல கோடி ரசிகர்களை இழந்துள்ள ஐபிஎல் தொடர்.
ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு முன்புபோல இல்லாமல், கூடுதலாக 2 புதிய அணிகளுடன் மொத்தமாக 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்டஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தற்போது விளையாடி வருகின்றன.
கூடுதலாக இரண்டு அணிகள் புதிதாக இணைந்துள்ள காரணத்தினால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முன்பு போல அல்லாமல் மிக சுவாரசியமாகவும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடக்கப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்த்தால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் அவ்வளவு சிறப்பாக போக இல்லை என்று தெரிகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் வார டிஆர்பி ரேட்டிங் கணக்கை எடுத்துப் பார்க்கையில், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிடைக்கப்பெற்ற டிஆர்பி ரேட்டிங் இவ்விடம் 33% கம்மியாக கிடைக்கப்பெற்றுள்ளது. 33% என்பது மிகப்பெரிய நம்பர் என்பதால் பிசிசிஐ தரப்பில் சற்று ஏமாற்றமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லீக் தொடர் போட்டிகள், அதனை அடுத்து பிளே ஆஃப் சுற்றுகள் இடம்பெற இருப்பதால் இனி வரும் நாட்களில் நடப்பு ஐபிஎல் தொடரின் டிஆர்பி ரேட்டிங் கடந்த வருடங்களைப் போல அதிகரிக்கும் என்று நாம் அனைவரும் நம்புவோம்.
நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் புள்ளி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளில் மூன்று வெற்றியுடன் முதலிடத்திலும், லக்னோ அணி 4 போட்டிகளில் மூன்று வெற்றியுடன் இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று போட்டிகள் இரண்டு வெற்றியுடன், மூன்றாவது இடத்திலும் குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றியுடன் நான்காவது இடத்திலும் உள்ளது.
அதேபோல அதிக ரன்கள் குவித்த வீரராக ஜோஸ் பட்லரும்( 3 போட்டிகளில் 205 ரன்கள்), அதிக விக்கெட்டுகளை குவித்த வீரராக உமேஷ் யாதவும் ( 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகள்) இருக்கின்றனர்.