மருந்தின்றி மக்கள் சாகப்போகிறார்கள் – மருத்துவர்கள் வெளியிட்ட உண்மை (வீடியோ)
நாட்டு மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் அதிகரித்து வரும் நெருக்கடிகள் குறித்து ஆலோசிக்க இலங்கை மருத்துவ சங்கம் (SLMA) அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளத.
அவசர சிகிச்சையை மீட்டெடுக்க முடியாத ஒரு மோசமான சூழ்நிலையில் நாடு உள்ளது. ஒரு சில நாட்களிலோ அல்லது சில வாரங்களிலோ அவை சாத்தியமில்லை என ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் தனியார் சுகாதார சேவைத் துறையில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கை மருத்துவ சங்கம், ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
பொது அறுவை சிகிச்சை மற்றும் சில உயிருக்கு ஆபத்தான நோய்கள் போன்ற சில சேவைகளை கட்டுப்படுத்துவதற்கு ஏற்கனவே முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியை சமாளிக்க அதிகாரிகள் உதவக்கூடிய வழிகளையும் இலங்கை மருத்துவ சங்கம் அடையாளம் கண்டுள்ளதுடன், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் அவற்றை பட்டியலிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஐந்து அம்சக் கடிதமொன்றை சுகாதார செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது.