மஹிந்தவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்குமாறு இலங்கை பொதுஜன பெரமுனவின் 11 கூட்டணி கட்சிகளும் , சுயேச்சை உறுப்பினர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதியிடம் பிரேரணையை சமர்ப்பித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.