ஜனாதிபதிக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் தயார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பதவி நீக்கம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
பதவி நீக்க பிரேரணை மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை என்பன தயார் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
தேவையான கையொப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டு முன்மொழிவுகளுக்கும் பெரும்பான்மை வாக்குகள் போதுமானதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
இரண்டு பிரேரணைகளுக்கும் ஆதரவளிக்க ஆளும் கட்சியின் பல பின்வரிசை உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இந்த பிரேரணைகளுக்கு ஆதரவளிப்பது அவர்களின் பொறுப்பு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.