எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருந்தவர் உயிரிழப்பு.

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் வாகனத்தோடு காத்திருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று வென்னப்புவவில் இன்று (10) இடம்பெற்றுள்ளது.
வென்னப்புவ, தம்பரவிலவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று அதிகாலை 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொச்சிக்கடை போருதொட்டவைச் சேர்ந்த மொஹமட் ஜெஸ்மின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.