டெல்லி கேப்பிடல்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
15வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
மும்பையின் Brabourne மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ரஹானே (8) மற்றும் வெங்கடேஷ் ஐயர் (18) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஸ்ரேயஸ் ஐயர் (54) மற்றும் நிதிஷ் ராணா (30) ஆகியோரை தவிர மற்றவர்கள், டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 19.4 ஓவரில் 171 ரன்கள் மட்டுமே எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 61 ரன்களும், ப்ரித்வீ ஷா 51 ரன்களும் எடுத்தனர்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், கலீல் அஹமத் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.