அரசிலிருந்து ஒரு பகுதி விலகல் ? பெரும்பான்மை இல்லா நிலை.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மேலும் சிலர் சுயாதீனமாக மாறுவதற்கு உள்ளதாக ஆளும் கட்சியிலிருந்து சுயாதீனமான அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நடத்தையைப் பொறுத்தே குழுவின் எதிர்கால பதில் அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் கலாசாரம் தேவையற்றது என மக்கள் கூறினால் அதனை ஏற்று மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.