இறங்கி வந்தார் கோட்டா! நிறைவேற்று அதிகாரத்தைக் குறைக்க இணக்கம்!!
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க வேண்டுமானால் அரசொன்று இருக்க வேண்டும். அந்த இடைக்கால அரசை அமைப்பதற்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நிலையான அரசொன்று அமையும் பட்சத்திலேயே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப் பெறலாம்” – என்றார்.