கோட்டா அரசுக்கு எதிரான பிரேரணை நிறைவேறியே தீரும்! – சஜித் அணி நம்பிக்கை.
“கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிச்சயம் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நம்பிக்கை வெளியிட்டார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும், தற்போதைய அரசு வீடு செல்ல வேண்டும் என்பதே நாட்டு மக்களின் நிலைப்பாடாகும்.
எனவே, மக்களின் கோரிக்கைக்குச் செவிமடுக்காமல், எவராவது இப்பிரேரணையை எதிர்த்து வாக்களித்தால் அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்டுவார்கள்” – என்றார்.
அதேவேளை, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கபடும் என ஆளுங்கட்சி தெரிவித்துள்ளது.