நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கம் !

சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார நீக்கபட்டுள்ளார்.
விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக பதவியேற்று கட்சியின் கொள்கைகளுக்கு துரோகம் இழைத்துள்ளதாக சுதந்திர கட்சி குற்றம் சாட்டியிருந்தது.
மேலும் இந்நிலையில் அவரை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குவதாக சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க அறிவித்துள்ளார்.