11 கட்சிகள் ஜனாதிபதியின் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளாதிருக்க முடிவு

இடைக்கால அரசாங்கம் அமைப்பது உள்ளிட்ட தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அரசாங்கத்தின் சுயேச்சை உறுப்பினர்களுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதில்லை என 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
முதல் கட்டப் பேச்சு வார்த்தை முடிவின்றி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப் பேச்சு வார்த்தை இன்று நடைபெறுவதாக இருந்த போதிலும், அவர்கள் கலந்து கொள்வதில்லை என முடிவு செய்துள்ளனர்.
சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார அரசாங்கத்தில் கொண்டு வரப்பட்டு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது