“Beast படத்துல நான்”.. பூஜா ஹெக்டே கொடுத்த செம்ம சர்ப்ரைஸ் அப்டேட்..

பீஸ்ட் படம் குறித்து டிவிட்டரில் நடிகை பூஜா ஹெக்டே ரசிகர்கள் உடன் கலந்துரையாடல் செய்துள்ளார்.
இயக்குனர் நெல்சன் திலிப்குமார் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்றது.
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாளை ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவும் துவங்கி உள்ளது. தமிழக உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் பீஸ்ட் படத்தில் தனது கதாபாத்திரத்தின் பெயர் குறித்த தகவலை பூஜா ஹெக்டே அறிவித்துள்ளார். அதில் பீஸ்ட் படத்தில் தனது பெயராக ‘ப்ரீத்தி’ என மகிழ்வுடன் கூறியுள்ளார்.