இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மேலும் நீடிப்பு- வெளியானது வர்த்தமானி.

367 அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உணவு மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இந்த வர்த்தமானியில் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
அப்பிள், திராட்சை, தோடம்பழம், யோகட் உள்ளிட்ட மேலும் பல உணவுகளும், குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம் உள்ளிட்ட பல இலத்திரனியல் பொருட்களும் இதில் அடங்குகின்றன.