காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகளுக்கு விடுத்துள்ள அவசர அழைப்பு.

காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தி வரும் இளைஞர், யுவதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடல்களில் கலந்துக்கொள்வதற்காக இளைஞர், யுவதிகளுக்கு தான் அழைப்பு விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கு எதிராக காலிமுகத்திடலில் கடந்த 5 நாட்களாக இளைஞர், யுவதிகளினால் இரவு பகல் பாராது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் நாளாந்தம் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.